
வழமைக்கு திரும்பியது தியந்தலாவ ஹப்புத்தளை வீதி
-யாழ் நிருபர்-
பதுளையில் இருந்து கொழும்புக்கு செல்லும் வீதியில் தியத்தலாவைக்கும் ஹப்புத்தளைக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் பாரிய மரங்கள் வீதியில் முறிந்து வீழ்ந்தமையினால் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து பல மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்தது.
பின்னர் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களும் தியத்தலாவ பொலிஸாரும் பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்து குறித்த மரங்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
பல மணித்தியாலங்களின் பின்னர் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
