நாடளாவிய ரீதியிலுள்ள குழந்தைகளின் போசாக்கு: எடுக்கப்படவுள்ள தீர்மானம்

நாடளாவிய ரீதியில் உள்ள குழந்தைகளின் போஷாக்கு அளவுகள் தொடர்பாக கணக்கெடுப்பை நடத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

குறித்த கணக்கெடுப்பானது ஜூன் மாதத்தில் வரும் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை ஒட்டி நடத்தப்படவுள்ளது.

இதில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் ஆறு முதல் 18 வயது வரையிலான சிறுவர்களின் ஊட்டச்சத்து அளவு தனித்தனியாக அளவிடப்படவுள்ளது.

குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களால் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுமென குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. அத்தோடு, கடந்த ஆண்டு இதேபோன்று நடத்தப்பட்ட ஆய்வில் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், இதன்படி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விசேட போஷாக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டதாக பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்