இரசாயன தொழிற்சாலையின் இரசாயன உலை வெடித்துச் சிதறியதில் 8 பேர் உயிரிழப்பு

இந்தியா-மகாராஷ்டிராவில் டோம்பிவிலி பகுதியில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையின் இரசாயன உலை வெடித்துச் சிதறியதில் 2 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதோடு, 60 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளனர்

நேற்று வியாக்கிழமை பிற்பகல் 1.40 மணியளவிலேயே இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர், தமது மீட்புப் பணியை தொடங்கியுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்