பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் இருவர் வைத்தியசாலையில்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு பேர் காயங்களுக்கு உள்ளாக்கி கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் மீது ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் வைத்து நேற்று வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் குறித்த மரம் விழுந்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பிரதான வீதிகளின் போக்குவத்தை மேற்கொள்ளும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் அவதானத்துடன் பயணிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்