தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மைகள் தீமைகள்
தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மைகள் தீமைகள்
தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மைகள் தீமைகள்
💻இன்று உலகில் பாரியதொரு வளர்ச்சி கண்டு வரும் ஒன்றாக தொழில்நுட்ப வளர்ச்சியானது காணப்படுகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சியானது பல்வேறு துறைகளின் வளர்ச்சியடைகின்றது. இன்று தொழில் நுட்பம் இல்லாமல் எதுவுமே கிடையாது என்ற நிலை உருவாகியுள்ளது.
💻தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று எமது தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. பல்வேறு செயற்பாடுகளை நொடிப் பொழுதில் நிறைவேற்றிக் கொள்வதற்கு தொழில் நுட்ப வளர்ச்சி துணை செய்கின்றது.
💻தினம் தினம் வளர்ச்சி கண்டு வரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.
தொழில்நுட்பம்
💻தொழில்நுட்பம் என்பது யாதெனில் பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்ய பயன்படும் அறிவியல் நுட்பங்களின் தொகுப்பே தொழில்நுட்பமாகும். இன்று இத்தகைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது மனிதனது வேகத்திற்கும் திறனிற்கும் ஈடுகொடுக்கும் படி மேம்பட்டே செல்கின்றது.
தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மைகள்
- நாம் இன்று பயன்படுத்தும் தொலைபேசி வழியாக நாம் ஒரு இடத்திலிருந்து வேறு நாடுகளில் இடம் பெறும் செய்திகளை இலகுவாக அறிய முடிகின்றது.
- கல்வி அறிவுடையோர் மாத்திரமன்றி கல்வியறிவில்லாதவர்களும் இலகுவாக ஒரு விடயத்தை மேற்கொள்ள தொழில்நுட்ப வளர்ச்சி உதவுகின்றது.
- தொழில்நுட்ப வளர்ச்சியானது ஒரு நாட்டினுடைய வளர்ச்சியில் பாரியதொரு பங்களிப்பைச் செலுத்துகின்றது.
- ஏழை, பணக்காரர் என்ற வேறுபாட்டை ஒழித்து அனைவரும் தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்துகின்றன
- அறிவு வளர்ச்சி உண்டாகும்.
- தொழில்நுட்பமானது மனித வள மேலாண்மையை மேம்படுத்த உதவுகின்றது.
- தொழில்நுட்பமானது ஒப்பீட்டளவில் சிறிய சேமிப்பக இடத்திற்கு எதிராக பரந்த அளவிலான தகவல்களைச் சேமிக்க அனுமதிக்கிறது.
- சிறப்புத் தேவைகள் உள்ளவர்கள் பல படிப்பினைகள் மற்றும் பாடங்களைப் பெறுவதன் மூலம் இயல்பான வாழ்க்கையை நடத்துவதற்கான வாய்ப்புகளை தொழில்நுட்பம் வழங்குகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சியின் தீமைகள்
- தொழில்நுட்பம் சமூக உறவுகளை எதிர்மறையாக பாதிக்கிறது, ஏனெனில் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல் அல்லது பல்வேறு பயன்பாடுகள் மூலம் தொடர்புகொள்வது நேரிடையான தொடர்பை மாற்றாது, ஏனெனில் தொழில்நுட்பம் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் திறனை இழப்பதன் காரணமாக தனிமை மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும்.
- தொழில்நுட்பமானது ஒரு நபரின் பெயர், முகவரி மற்றும் தொடர்புத் தகவல் போன்ற தனிப்பட்ட தகவலைப் பெற அனுமதிக்கிறது
- வீதியில் நடந்து செல்லும் போது கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால், வீதிவிபத்துகள் பெருகியுள்ளன.
- இன்று இந்த இணையமும் கணினி விளையாட்டுக்களும் ஒன்று சேர்ந்து மாணவர்களின் கல்வியை கேள்வி குறியாக்கும் நிலையை ஏற்படுத்துவதோடு பாலியல் ரீதியான வன்கொடுமைகளுக்கும் வழி வகுக்கின்றது.
- மேலும் இணைய வழிக் குற்றங்கள் இடம்பெறல், தீவிரவாதம், தனிமை, சமூக ரீதியான ஒற்றுமையின்மை, வேலையில்லா திண்டாட்டம், சூழல் மாசடைதல் என பல்வேறு தீமைகள் தொழில்நுட்பத்தில் காணப்படுகின்றது.
முடிவுரை
💻தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு நன்மைகள் காணப்படுகின்றன அதேபோன்று தீமைகளும் காணப்படுகின்றன. எனவே நல்லவற்றை மட்டும் தேடிக்கொண்டு தீயவற்றை தவிர்த்து நடப்பது எமக்கும் எம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் சிறந்ததாகும்.
தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மைகள் தீமைகள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்