
இளைஞர்களால் வழங்கப்பட்ட நாய்க்குட்டி தன்சல்
பாணந்துறையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட வித்தியாசமான தன்சல் அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்தது.
தானம் வழங்குதல் என்றால் உணவு, உடை என்பவற்றிற்கு அப்பாற்பட்டு ஜீவகாருண்யம் கொண்டு ஆதரவற்ற விலங்குகளுக்கு வாழ்வளிக்கும் நோக்குடன் இளைஞர் குழு ஒன்று மேற்கொண்ட இந்த புதிய முயற்சிக்கு அனைவர் மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இவர்கள் ஆதரவு அற்று தெருவில் கைவிடப்பட்ட நாய்க்குட்டிகளை கைப்பற்றி அவற்றிற்கு தடுப்பூசி வழங்கி பெண் நாய்க்குட்டிகளை சரியான காலப்பகுதியில் கருத்தடை சிகிச்சை செய்து அவற்றை உரிய முறையில் வழங்குகின்றனர்.
இதேவேளை குறித்த தன்சலுக்கு பொதுமக்கள் ஆர்வத்தோடு வந்து நாய்குட்டிகளை பெற்றுசெல்வதையும் அவதானிக்க முடிந்தது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

