பிரச்சார மேடை இடிந்து வீழ்ந்ததில் 9 பேர் பலி: பலர் காயம்

மெக்சிகோவின் நியூவோ லியோன் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மேடையின் ஒருபகுதி இடிந்து வீழ்ந்ததில் ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

குறித்த சம்பவத்தில் 50 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரச்சார நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது குறித்த பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக மேடையின் ஒரு பகுதி உடைந்து வீழ்ந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்