மாவட்ட செயலகத்தினால் வெசாக் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் நிகழ்வின் தொடக்க நாளான நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் மஹாமாயபுர ஸ்ரீ சித்தத்தாராம விஹாரவாசி வணக்கத்திற்குரிய கமுனுபுர சுமேதானந்த தேரரின் சொற்பொழிவொன்று மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ்வருட வெசாக் பண்டிகையை சிறப்பிக்கும் முகமாக மே மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை வெசாக் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெசாக் பெளர்ணமி தினம் உலகெங்கும் வாழும் பௌத்த மக்களின் சிறப்பு மிக்கதொரு நாளாகும். இது மே மாதத்தில் வரும் பௌர்ணமி தினமாகும். புத்தர் பெருமானின் பிறப்பு, புத்தர் நிலையை அடைதல் மற்றும் பரிநிர்வாணமடைதல் ஆகிய மூன்று நிகழ்வுகளை முன்னிறுத்தி இப்பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) எஸ்.சுதாகரன் ,பிரதம கணக்காளர் ப.ஜெயபாஸ்கர் , மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்