பெரகல வெல்லவாய பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிப்பு

-பதுளை நிருபர்-

பெரகல வெல்லவாய பிரதான வீதியில் பாரிய மரம் முறிந்து வீதியில் விழ்ந்தமையினால் குறித்த வீதியின் உடனான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரகல வெல்லவாய வீதியில் கல்கத்த பகுதியில் குறித்த மரம் இன்று வியாழக்கிழமை முறிந்து வீதியில் விழ்ந்துள்ளது.

இதனால் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்