நேற்று வீசிய பலத்த காற்றில் பல பகுதிகள் சேதம்

-பதுளை நிருபர்-

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று புதன் கிழமை இரவு பலத்த காற்று வீசியதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

தெல்பெத்த தோட்ட தொடர் குடியிருப்பு மீது மரம் விழுந்ததில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், ஹப்புத்தளை க்ளெனோர் பி பிரிவில் பல வீடுகளின் கூரைகள் காற்றினால் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரகல கொஸ்லந்த வீதியின் கல்கந்த பகுதியில் வீதியின் குறுக்கே பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பண்டாரவளை உள்ளூராட்சி சபைக்கு அருகாமையிலும் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எனவே, இக் காலத்தில் காற்றுடன் கூடிய காலநிலை நிலவுவதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு.ஈ.எம்.எல்.உதயகுமார மக்களிடம் கேட்டு கொண்டுள்ளார்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்