
கெஹலிய உட்பட ஒன்பது பேரின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை
நோயாளிகளுக்கு தரமற்ற மருந்துகளை வழங்கி பல கோடி ரூபா வருமானம் ஈட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட சுகாதார அமைச்சின் ஒன்பது அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினால் முன்னாள் சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள், சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மருந்துப்பொருள் மோசடி இடம்பெற்ற காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 8 அதிகாரிகளின் வருமானம் மற்றும் வங்கி கணக்குகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
