காணாமற்போன மாணவன் பிக்குவாக துறவறம்

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் மதுரங்குளிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் காணாமல் போன 12 வயதுடைய மாணவன் கதிர்காமத்தில் விகாரையொன்றில் பிக்குவாக துறவறம் பூண்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மாணவனின் தாய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்ற நிலையில் பாட்டி மற்றும் தந்தையின் பராமரிப்பில் இருந்த இவர் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தவேளை பாட்டியிடம் தகராறு செய்து வீட்டை விட்டு வெளியேறினார்.

கொழும்புக்கு வந்த மாணவனை பிக்கு ஒருவர் சந்தித்தாகவும் மாணவனின் விருப்பத்திற்கிணங்க கதிர்காமம் மஹியங்கனை விகாரையின் விஹாராதிபதி தம்ம மைத்திரி தேரரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை பிக்குவாக மாறிய சிறுவனுக்கு மதுரன் குளிரில் சுபோதின் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக விகாரையை சேர்ந்த அனுருத்த மைத்திரி தேரர் தெரிவித்தார்.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்