
நாளை சூறாவளி உருவாகும் சாத்தியம்
தற்போது வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் தாழமுக்கம் ஒன்று உருவாகி உள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் உறுதிப்படுத்தி உள்ளன.
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் நேற்றிரவு தாழமுக்க நிலையொன்று உருவாகியுள்ளது.
இது எதிர்வரும் நாட்களில் வடகிழக்குக் திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவடைந்து நாளை ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து, எதிர்வரும் 25ஆம் திகதியளவில் ஒரு சூறாவளியாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த சூறாவளிக்கு ஓமன் நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட ரீ-மல் எனும் பெயர் வழங்கப்பட்டுள்ளது.
இது எதிர்வரும் 25ஆம் திகதியளவில் வடக்கு ஒரிசா அல்லது மேற்கு வங்கம் பகுதியினூடாக (பாலச்சூர் – கொல்கத்தா) ஊடறுத்துச் செல்லலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
