
வற்றிப்போன விக்டோரியா நீர்த்தேக்கம்
நாடு முழுவதும் கடும் மழைபெய்வதன் காரணமாக நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிந்தாலும், நீர் மின் உற்பத்திக்கு அதிக அளவில் நீர் வழங்கும் மிகப் பெரிய நீர்த்தேக்கமான விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் வற்றிய நிலையின் காணப்படுகிறது.
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் வற்றியுள்ளதன் காரணமாகப் பழைய தெல்தெனிய நகரின் சில பகுதிகள் தென்படுகின்றது.
கண்டி மாவட்டம் உள்ளிட்ட மத்திய மலையகப் பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்ற போதிலும், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்போஷன பகுதிகளுக்கு போதிய மழை பெய்யாத காரணத்தினால் விக்டோரியா நீர்த்தேக்கம் வறண்டு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
