
விராட் கோலிக்கு உயிர் அச்சுறுத்தல்
ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான விராட் கோலிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று இடம்பெறவுள்ள வெளியேற்றல் போட்டிக்கான பயிற்சியாட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்புகளை ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரத்துச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் குறித்த சம்பவம் தொடர்பில் 4 சந்தேகநபர்கள் அஹமதாபாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
