
தனியாக இருந்த வயோதிபர் கட்டையால் அடித்துக் கொலை
கொழும்பில் வீட்டில் தனியாக இருந்த ஒருவர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் கொழும்பு 13, ஜம்பட்டா வீதியை சேர்ந்த 67 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முதியவரின் சடலம் அவருடைய வீட்டில் மீட்கப்பட்டுள்ளது .
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது இனந்தெரியாத நபர் ஒருவர் இவருடைய வீட்டில் புகுந்து அவரை கட்டையால் தாக்கி கொலை செய்ததாகத் தெரியவந்துள்ளது .
மேலும் சம்பவம் தொடர்பிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
