
மழை காரணமாக மின் உற்பத்தி அதிகரித்துள்ளது எனவே மின் கட்டணத்தை குறைக்கவும்
மழை காரணமாக மின் உற்பத்தி அதிகரித்துள்ளது எனவே மின் கட்டணத்தை குறைக்கவும், என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக நீர்மின் நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை, விக்டோரியா, ரன்தெனிகல மற்றும் சமனல வெவ ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டங்கள் அதிகரித்துள்ளன
இவ்வாறான நிலையில், மின்சார அலகொன்றின் விலையை குறைப்பதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு 2 தடவைகள், மின்சார சபையிடம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளது.
என்றாலும் அந்த முன்மொழிவுகள் இதுவரையில் சமர்ப்பிக்கப்படவில்லை.
15-20 சதவீதமாக இருந்த நீர்மின் உற்பத்தி மட்டம், இம்மாதம் 20 ஆம் திகதி ஆகும் போது 31 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவும் இலங்கை மின்சார சபையும் ஒன்றிணைந்து இந்த நன்மையை மின்சார பாவனையாளர்களுக்கு வழங்க வேண்டும், எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
