
அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய மாணவர்கள் மூவர் உயிரிழப்பு
அமெரிக்காவில் வாகன விபத்தில் சிக்கி இந்திய மாணவர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் 5 இந்திய மாணவர்கள் சென்ற கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஆர்யன் ஜோஷி, ஷ்ரியா அவர்சாலா, அன்வி சர்மா ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கார் வேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளதுடன் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் நடத்தி வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
