
பாணுக்குள் கண்ணாடி துண்டு
யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய் கிழமை இரவு பாணுக்குள் கண்ணாடி பீங்கான் துண்டு காணப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
யாழ். மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் வாங்கிய பாணிலேயே கண்ணாடிப் பீங்கான் துண்டு காணப்பட்டுள்ளது.
குறித்த கடைக்கு சுன்னாகம் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இருந்தே பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டர் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்து சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
