
கணவனின் சடலத்திற்கு உரிமைகோரும் நான்கு மனைவிகள்
குருநாகல் – குளியாப்பிட்டிய மருத்துவ பீடத்திற்கு அருகில் இரண்டு சைக்கிள்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நபரின் சடலத்தை 4 மனைவிமார்கள் உரிமை கோரியுள்ளனர்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் உயிரிழந்த நபரின் சடலத்தை ஏற்றுக்கொள்வதற்கே இவ்வாறு நான்கு மனைவிகள் முன்வந்துள்ளதாக குளியாப்பிட்டிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலன்னறுவை உட்பட பல பிரதேசங்களில் வசித்து வந்த பிரேமரத்ன அதிகாரி என்ற 59 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் சட்டப்படி திருமணம் செய்து கொண்ட மனைவியிடம் சடலத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சைக்கிளில் பயணித்த இருவரும் குருநாகல் நோக்கி சென்ற காரை பின்தொடர்ந்து துரத்த முற்பட்ட போதே விபத்து நேர்ந்துள்ளதாகவும் இந்த விபத்து பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை விபத்தில் படுகாயமடைந்த மற்றைய நபர் குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
