வடக்கு ரயில் சேவை பாதிப்பு

பொத்துஹெர மற்றும் பொல்கஹவெல ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று இன்று புதன் கிழமை தடம் புரண்டுள்ளது.

குருநாகலிலிருந்து கொழும்பு நோக்கிச் பயணித்துக் கொண்டிருந்த அலுவலக ரயில் ஒன்றே இவ்வாறு தடம் புரண்டது.

இதனால், வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்