சாவகச்சேரியில் பூசகரிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகை மீட்பு

-யாழ் நிருபர்-

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி பூசகரிடம் கொள்ளையடிக்கப்பட்ட ஒன்றரை பவுண் தங்க நகை நேற்றையதினம் செவ்வாய் கிழமை மீட்கப்பட்டது.

சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், சங்கத்தானையை சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவர் கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து தொடர்புடையவர் என்ற ரீதியில் முல்லைத்தீவினை சேர்ந்த ஒருவருக்கு பொலிஸாரால் வலைவீசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பூசகரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகையினை உருக்கியவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இருவரையும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி யூட்சன் உத்தரவிட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்