லண்டனில் திறக்கப்பட்டுள்ள இலங்கை உணவகமொன்றின் புதிய கிளை

லண்டனில் உள்ள தலைசிறந்த இலங்கை உணவகமான கொழும்பு கிச்சனின் புதிய கிளை தெற்கு லண்டனிலுள்ள புட்னியில் இம்மாதம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கை உணவை விரும்பும் மக்கள், இந்த உணவகத்தைத் தேடி வரும் அளவுக்கு அங்கு சுவையான இலங்கை உணவு கிடைக்கும் என அந்த உணவகத்தின் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

“எங்கள் உணவகத்துக்கு வருபவர்கள், தாங்கள் லண்டனின் பல பகுதிகளிலிருந்தும், ஏன், வெளிநாடுகளிலிருந்தும் கூட எங்கள் உணவகத்துக்கு வருவதாக கூறும் போது அதை கௌரவமாக கருதுகிறேன்.” என அவ் உணவகத்தின் உரிமையாளரும் தலைமை சமையல் கலை நிபுணருமான சில்வியா பெரேரா தெரிவித்துள்ளார்.

எனவே தான் மேலும் பலர் எங்கள் பாரம்பரியத்தைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் எங்கள் உணவகத்தின் இரண்டாவது கிளையைத் திறப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்