ஆன்மீக குரு ஸ்ரீ.ஸ்ரீ.ரவிசங்கர் குருஜி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வாழும் கலை பயிற்சியின் நிறுவுனர், ஆன்மீக குரு ஸ்ரீ.ஸ்ரீ.ரவிசங்கர் குருஜி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பு நேற்று திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போது, சஜித் பிரேமதாச தனது எதிர்கால அரசியல் பணிகளுக்காக ஸ்ரீ.ஸ்ரீ.ரவிசங்கர் குருஜியிடம் ஆசியைப் பெற்றுக்கொண்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்