மூளைக் காய்ச்சலால் உயிரிழந்த சிறைக்கைதி

மாத்தறை சிறைச்சாலை கைதி ஒருவர் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

3 மாதங்களுக்கு முன்னர் சிறையில் அடைக்கப்பட்ட 24 வயதுடைய நபரே இவ்வாறு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

குறித்த கைதி மூளைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும், இது தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தவிர மாத்தறை சிறைச்சாலையில் உள்ள மற்றுமொரு கைதியும் காய்ச்சல் காரணமாக மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பரில் மாத்தறை சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சல் கைதிகள் பாதிக்கப்பட்டதோடு, சில மரணங்களும் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்