கொழும்பில் சரிந்து விழுந்த மின் விளம்பர பலகை

கொழும்பு பம்பலப்பிட்டியில் நேற்று திங்கட்கிழமை பாரிய மின் விளம்பரப்பலகை சரிந்து விழுந்துள்ளது.

கொழும்பில் தற்போது பெய்துவரும் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள ஏற்பட்டள்ள நிலையில் பம்பலப்பிட்டி பகுதியில் கடை ஒன்றின் மேல் பொருத்தப்பட்டிருந்த பாரிய மின் விளம்பரப்பலகை சரிந்து விழுந்துள்ளது.

இதன் மூலம் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் சில கடைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்