இப்ரஹிம் ரைசியின் உடல் இன்று அடக்கம்

 

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி, இப்ரஹிம் ரைசியின் உடல் அவரது சொந்த இடமான மஷாட்டில் இன்று செவ்வாய் கிழமை அடக்கம் செய்யப்படவுள்ளது.

நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை இரவு இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 63 வயதான ஈரான் ஜனாதிபதி, வெளி விவகார அமைச்சர் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர்.

ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சரின் மறைவு தொடர்பாக கவலை வெளியிட்டுள்ள ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லாஹ் அல் கமேனி, 5 நாட்களை துக்ககாலமாக பிரகடனம் செய்துள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்