
தளபாடங்கள் தயாரிக்கும் கட்டிடத்தில் தீ: காவலாளி உயிரிழப்பு
மொரட்டுமுல்ல வில்லோரவத்த பிரதேசத்தில் தளபாடங்கள் மற்றும் மெத்தைகள் தயாரிக்கும் இரண்டு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரட்டுமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர் அந்த இடத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த பிலியந்தலை தொம்பே பகுதியைச் சேர்ந்த ஹேவா வாசம் ஹிமா துவகே நிஹால் ரஞ்சித் (வயது – 57) என்பவர் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் தீயை அணைக்க முயன்ற போதும் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில மணித்தியாலங்களின் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
