
மில்கோ நிறுவனத்தில் 50 வீதத்தால் குறைந்துள்ள உற்பத்தி
மில்கோ நிறுவனத்தின் தினசரி பால் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் திரவப் பாலின் அளவு 1,40,000 லீற்றரைத் தாண்டியுள்ளதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் இந்திக்க குருகே தெரிவித்தார்.
மில்கோ நிறுவனம் தனது தயாரிப்புகளுக்கு நாளாந்தம் பயன்படுத்தும் திரவப் பாலின் அளவு கடந்த காலங்களில் 65,000 லீற்றராகக் குறைந்துள்ளது.
மில்கோ நிறுவனத்தின் நாளாந்த திரவப் பால் இலக்கு 1,20,000 லீற்றர் எனவும், நிறுவனத்தின் நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக அத்தொகை 50 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மில்கோவின் பால் மா உற்பத்தி கடந்த காலங்களில் முற்றாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது ஹைலேண்ட் பால் பவுடர் 80 மெற்றிக் தொன் சேமிப்பில் உள்ளதோடு, ஹைலண்ட் ஐஸ்கிரீம் மற்றும் தயிர் உற்பத்தித் திறனும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மில்கோ தலைவர் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
