
வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்த மரம்
கண்டியில் இன்று திங்கட்கிழமை குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டுக்கு மேல் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
தெல்தோட்டை நூல்கந்தூர ஹேவாஹேட்ட நாராஹின்ன போன்ற பகுதியில் நேற்று இரவு முதல் கடுமையான மழை பெய்து வரும்நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மரம் முறிந்து விழுந்தமையினால் வீட்டு கூரை மற்றும் வீட்டில் சில பொருட்களும் சேதமாகியுள்ளதாகவும் எனினும் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
