மதுபானம் காய்ச்சிய சப்-இன்ஸ்பெக்டர் கைது

அநுராதபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபானம் தயாரிக்கும் உபகரணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் திறப்பனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரது வீட்டில் வைத்து பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

இதன்போது அவர் தங்கியிருந்த வீட்டில், சட்டவிரோதமாக காய்ச்சப்பட்ட மதுபானம், எரிவாயு அடுப்பு, பீப்பாய், அதைக் காய்ச்ச பயன்படுத்திய செப்புச் சுருள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீதான விசாரணைகளின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்