
ஈரான் ஜனாதிபதி உயிர் இழந்ததாக அறிவிப்பு
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்துவிட்டதாக ஈரான் அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி ரைசிக்கு மேலதிகமாக அங்கு பயணித்த ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் 9 பேர் பயணித்த ஹெலிகாப்டரே விபத்துக்குள்ளானது.
குறித்த பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
