
ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலி முற்றாக எரிந்து நாசம்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் உயிருடன் வருவதற்கான “வாய்ப்பு எதுவும் இல்லை” என்று அந்த நாட்டின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் ஹெலிகொப்டர் “முற்றிலும் எரிந்துவிட்டதாக ஈரானிய அதிகாரி ஒருவரை மேற்கோள் வௌிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
“விபத்தில் ஈரான் ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் பயணித்த ஹெலிகொப்டர் முற்றிலும் எரிந்தது. துரதிர்ஷ்டவசமாக, அனைத்து பயணிகளும் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது” என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
ஈரான் ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் நேற்று ஞாயிற்று கிழமை நீர்ப்பாசனத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு மீண்டும் திரும்பும் போது ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமா அவர்கள் பயணித்த ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்க வேண்டி இருந்தது.
எனினும் தரையிறங்கவேண்டிய பகுதியில் இருந்து 2 கிலோமீற்றர் தொலைவில் ஹெலிகொப்டர் நேற்றைய தினம் விபத்துக்குள்ளானமை குறிப்பிடதக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
