
எரியூட்ப்பட்ட 400 கிலோ போதைப்பொருள்
புத்தளத்தில் நேற்று சனிக்கிழமை 400 கிலோ கிராம் போதைப்பொருட்கள் எரியூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் அண்மைய காலங்களில் வழக்குகள் நிறைவடைந்த 400 கிலோ கிராம் போதைப்பொருட்களே நேற்று பிற்பகல் எரித்து அழிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு சொந்தமான புத்தளம் வனாத்தவில்லு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட விசேட அடுப்பில் குறித்த போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
