பதுளையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்-

பதுளை தெமட்டவெல்ஹின்ன பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை தெமட்டவெல்ஹின்ன பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பதுளை பகுதியில் கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விநியோகித்து வருவதாக கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸார் குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது 3 கிலோ 80 கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றி உள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர் .

சந்தேகநபரின் வீட்டின் பகுதியில் வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டப்பட்டு குறித்த அஸ்திவாரதில் கஞ்சா பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை பகுதியில் அதிகளவில் கஞ்சா மீட்கப்பட்டது இதுவே முதல் தடவை என பொலிஸார் தெரிவித்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்