யானை பற்றிய 10 வரிகள்

யானை பற்றிய 10 வரிகள்

யானை பற்றிய 10 வரிகள்

⬛இந்த உலகத்தில் பல விதமான விலங்குகள் உள்ளன. ஒவ்வொரு விலங்கும் உருவத்திலும். நிறத்திலும். குணத்திலும் வேறுபட்டவையாக இருக்கும். எப்படி மனிதர்களுக்கு ஒரு தனித்துவமான சிறப்புகள் உள்ளதோ அதே போன்று விலங்குகளுக்கும் தனித்துவமான சிறப்புகள் உள்ளது. அந்தவகையில் பெரிய உருவத்தில் காணப்படும் யானையைப் பற்றிப் பார்ப்போம்.

⬛இந்த யானைகள் காட்டில் வாழக்கூடிய மிகப் பெரிய விலங்காக காணப்படுகின்றன. இது பாலூட்டி வகைச் சேர்ந்த தாவர உண்ணி விலங்காக காணப்படுகிறது. யானைகளில் ஆசிய யானை, ஆப்பிரிக்க காட்டு யானை, ஆப்பிரிக்கப் புதர் வெளி யானை என மூன்று சிற்றினங்கள் உண்டு.

யானை பற்றிய 10 வரிகள்
  1. ஆண் யானையை களிறு என்றும், பெண் யானையை பிடி என்றும் அழைக்கின்றனர். பெண் யானைகளின் கர்ப்ப காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.
  2. இரண்டு முதல் மூன்று மணி நேரம் மட்டுமே யானைகள் உறங்குகின்றன. மற்ற நேரத்தில் காடுகளை உலாவி வருகின்றன.
  3. யானைகள் தான் தரையில் வாழும் விலங்குகளில் மனிதனுக்கு அடுத்ததாக அதிக நாள் உயிர் வாழும் விலங்காக காணப்படும். சராசரி வாழ் நாளாக 70 ஆண்டுகள் வாழும்.
  4. யானையின் மூளை 5 kg ஆகும். இதற்கு ஞாபக சக்தி மிக அதிகமாக காணப்படும்.
  5. ஆண் யானையை களிறு என்றும் பெண் யானையை பிடி என்றும் யானையின் குட்டியை கன்று, குட்டி என்றும் அழைக்கப்படுகிறது.
  6. மனிதனின் மொத்த உடலில் உள்ள சதையைவிட யானையின் தும்பிக்கையில் அதிக சதை உள்ளது.
  7. யானையின் பற்கள் சுமார் ஐந்து கிலோ எடை கொண்டவை .
  8. யானை இனத்தை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செப்டம்பர் 2ஆம் திகதி யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
  9. யானையின் உடம்பில் உள்ள சூட்டை குறைப்பதற்காகவே அதன் காதுகளை ஆட்டிக் கொண்டே இருக்கும்.
  10. யானைகள் பிறக்கும் போது பார்வை திறன் அற்றவையாக உள்ளது. அளவில் பெரியதாக இருக்கும் யானைக்கு எறும்பு, தேனீக்கள் எதிரியாக உள்ளது. இந்தோனேஷிய தீயணைப்பு துறையில் யானைகள் தீயை அணைப்பதற்கு பயன்படுகிறது

யானை பற்றிய 10 வரிகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்