காலை மீண்டு திறக்கப்பட்டது எல்ல வெல்லவாய வீதி

மண்சரிவு அபாயம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட எல்ல வெல்லவாய வீதி இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதய குமார தெரிவித்தார்.

எல்ல கரந்தகொல்ல மலிதகொல்ல பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அவ்விடத்தின் இருபுறமும் பொலிஸ் வீதித்தடைகள் போடப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் பூரண கண்காணிப்பின் கீழ் கடுமையான அவதானத்துடன் குறித்த வீதியில் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இன்றும் மழை பெய்தால் இந்த வீதி மீண்டும் ஆபத்தானதாக மாறக்கூடுமென அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

எந்த நேரத்திலும் குறித்த வீதியை மீண்டும் மூட வேண்டிய நிலை ஏற்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்