3000 ரூபாவை தொட்ட எலுமிச்சை
தம்புள்ளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் நேற்று புதன் கிழமை ஒரு கிலோ எலுமிச்சையின் சில்லறை விலை 3000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஊவா மாகாணத்தில் இருந்து எலுமிச்சை விநியோகிக்கப்படுகிறது.
இன்றைய தினங்களில் போதியளவு எலுமிச்சை கிடைக்காத காரணத்தினால் எலுமிச்சையின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
