பொருத்தமற்ற வெங்காயங்கள் மீட்பு

-மூதூர் நிருபர்-

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள தோப்பூர் வாராந்த சந்தையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற பெரிய வெங்காயம் நேற்று செவ்வாய்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது பகுதியளவில் அழுகிய 160 கிலோ கிராம் பெரிய வெங்காயங்கள் தோப்பூர் பொதுச்சுகாதார பரிசோதகரால் கைப்பற்றப்பட்டதுடன் வியாபாரிக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பின்னர் கைப்பற்றப்பட்ட வெங்காயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதாக தோப்பூர் பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.சஜாத் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்