5 வயதுச் சிறுமியின் உயிரைப் பறித்த தொலைபேசி
களுத்துறை மக்கொனை பகுதியில் ஐந்து வயதுச் சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
மக்கொனை, முங்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து வயதுச் சிறுமியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
குறித்த சிறுமி கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்ய முயன்ற போதே மின்சாரம் தாக்கியுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அவரது சடலம் பேருவளை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்காக களுத்துறை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்