மனஅழுத்தம் : தனக்கு தானே தீ வைத்த யுவதி

யாழ். வல்வெட்டித்துறை சிறி முருகன் குடியேற்றம் பகுதியில் நேற்று புதன் கிழமை யுவதி ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக்கொண்டு உயிரிழந்துள்ளார்.

வல்வெட்டித்துறை ஸ்ரீ முருகன் குடியேற்றம் பகுதியைச் சேர்ந்த அன்ரன் மரியதாஸ் கிருபாகினி (வயது – 26) என்ற இளம் யுவதியை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மனஅழுத்தம் காரணமாக தீடிரென விபரீத முடிவு எடுத்து தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்