10 ஓவரில் 10 விக்கெட்டுகளால் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
17ஆவது இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் 57ஆவது போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 10 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டி நேற்று புதன்கிழமை ஹைதராபாத் ரஜிவ் காந்தி விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.
166 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 167 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் போட்டியில் அணி ஒன்று 10 விக்கெட்களால் வெற்றிபெற்றது இதுவே முதல் தடவையாகும்.
அத்துடன் 10 ஓவர்களுக்குள் 45 நிமிடங்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி இலக்கை அடைந்தது
இதேவேளை யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இலங்கை சுழல்பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இந்தப் போட்டியின் மூலம் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அவர் மிகச் சிறப்பாக 4 ஓவர்களை வீசி 27 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்