போலி மோதிரங்களை அடகு வைத்த இருவர் கைது
கொழும்பில் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி நகைகளை அரச வங்கியில் ஒன்றில் அடகு வைத்து பணம் பெற்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த வங்கியிலிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் தனமல்வில பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர் .
குறித்த இரண்டு நபர்களும் போலி மோதிரங்களை அடகு வைத்து 17 இலட்சத்து 9,000 ரூபா பணத்தைப் பெற்றுள்ளனர்.
இவர்கள் பல முறை பத்து போலி மோதிரங்களை வங்கியில் அடகு வைத்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது .
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்