மகளிர் T20 உலகக் கிண்ண தகுதிச் சுற்று இறுதிப் போட்டி : இலங்கை அணி வெற்றி
ஸ்கொட்லாந்து மகளிர் அணிக்கு எதிராக நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு 20 தகுதிகாண் சுற்றின் இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி 68 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் இலங்கை மகளிர் அணியின் சமரி அத்தபத்து 102 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து 170 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய ஸ்கொட்லாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 101 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்