கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு

கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு

கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு

💥கார்ல் மார்க்ஸ், ஜேர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில், ட்ரையர் நகரில் 1818 மே 5ஆம் திகதி பிறந்தார். காரல் மார்க்ஸின் தந்தை யூதரான ஐன்றிச் மார்க்ஸ் ஆவார்.இவரின் தந்தை வசதி படைத்த வழக்குரைஞர், கார்ல் மார்க்ஸ் அவருக்கு மூன்றாவது மகனாவார்.1830 வரை தனிப்பட்ட முறையில் இவருக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. கார்ல் மார்க்ஸ் தமது பதினேழாம் வயதில் சட்டம் பயிலப் பான் பல்கலைக் கழகம் சென்றார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்ற கார்ல் மார்க்ஸ் யெனா பல்கலைக்கழகத்தில் மெய்யியலுக்கான முனைவர் பட்டத்தினைப் பெற்றார்.

💥1841இல் பட்டம் பெற்ற மார்க்ஸ் சில காலம் இதழியல் துறையில் இருந்தார். கொலோன் நகரில் இரைனிசு சைத்துங்கு எனும் இதழின் ஆசிரியராக இருந்தார். ஆனால் அவருடைய தீவிர அரசியல் கருத்துகளின் விளைவாக இடர் ஏற்படவே பேரிசு சென்றார். அங்கு 1844ல் பெற்றிக் ஏங்கல்சைச் சந்தித்தார். ஒருமித்த கருத்தும் மிகுந்த திறமையும் கொண்ட இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அவர்களிடையே தோன்றிய தனிப்பட்ட உறவும் அரசியல் நட்பும் இறுதிவரை நிலைத்திருந்தது.

திருமணம்

💥பேரிசில் இருந்தபோது லுட்விக் ஃபொன் வெசற்பாலென் பிரபுவின் மகளான 21 வயது நிறைந்த ஜென்னியுடன் மார்க்ஸ்க்கு காதல் மலர்ந்தது. அப்போது மார்க்ஸ்க்கு 17 வயது. ஜென்னி குடும்பத்தினர் கொண்டிருந்த கனவுகளுக்கு மாறாக ஜென்னி 29 வயதில் கார்ல் மார்க்ஸை திருமணம் எளிமையாக திருமணம் செய்து கொண்டார்.

கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு
கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு
பிள்ளைகள்

💥கார்ல் மார்க்ஸ் – ஜென்னி தம்பதியருக்கு 7 குழந்தைகள் பிறந்த போதிலும் அதில் 4 குழந்தைகள் வறுமை, நோய் காரணமாக இறந்துவிட்டன. 3 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை என 4 குழந்தைகளை பறிகொடுத்துவிட்ட மார்க்ஸ் – ஜென்னி தம்பதியர் 3 பெண் குழந்தைகளை மட்டுமே வளர்த்தார்கள்.

மூலதனம் நூல்

💥மார்க்ஸ் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் 15 ஆண்டுகள் தங்கியிருந்து மூலதனம் எனும் நூலை எழுதினார். கார்ல் மார்க்சின் சிறப்பு வாய்ந்த மூலதனம் நூலின் முதல் தொகுதி 1867இல் வெளிவந்தது. 1883இல் மார்க்ஸ் இறந்த பிறகு அவர் விட்டுச் சென்ற குறிப்புகளையும் கையெழுத்துப் படிகளையும் ஏங்கல்ஸ் பதிப்பித்து வெளியிட்டார்.

கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு
கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு
தத்துவம்

💥மதத்தலைவர்களின் போக்கினை வெறுத்த அவர் மதத்தால் மக்களுக்கு நன்மை ஏதும் கிடைக்காது என்று நம்பினார். வரலாற்றிலும், தத்துவத்திலும் அவரது கவனம் திரும்பியது. நிறைய தத்துவ நூல்களை வாசிக்கத் தொடங்கினார். அவர் மனதில் பொதுவுடமைத் தத்துவம் வேர் விடத்தொடங்கியது. தனது பொதுவுடமைக் கருத்துகளை துண்டு பிரசுரமாக வெளியிட்டு பல்கலைக்கழக மாணவர்களிடம் பரப்பினார்.

💥தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை எப்படி போராடி பெறுவது என்பதை விளக்கும் துண்டு பிரசுரங்களை பொதுவுடமை அறிக்கை என்ற பெயரில் மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகிய இருவரும் வெளியிட்டனர். அதில் முதலாளித்துவ சமுதாய அமைப்பினை வன்முறை புரட்சிகளால் உடைத்தெறியுமாறு தொழிலாளிகளுக்கு அறிவுறுத்தினார் மார்க்ஸ். 1847-ஆம் ஆண்டு லண்டனில் தொழிலாளர்கள் மாநாடு ஒன்று நடந்தது. அந்த மாநாட்டில்தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (வுhந ஊழஅஅரnளைவ ஆயnகைநளவழ) என்ற கம்யூனிச சித்தாந்தத்தை அறிமுகப்படுத்தி ‘உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ (றுழசமநசள ழக யுடட டுயனெ ருnவைந) என்ற முழக்கத்தை மார்க்ஸும்இ ஏங்கல்ஸும் முன்வைத்தனர். மார்க்ஸ் பல நாடுகளில் சுற்றித் திரிந்து தன் கொள்கைகளைப் பரப்பினார். கடைசியில் 1849-ஆம் ஆண்டு ஏங்கல்ஸின் உதவியுடன் அவர் லண்டனில் நிரந்தமராக குடியேறினார்.

கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு
கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு

💥உலகம் உய்வு பெற வேண்டும் என்று உழைத்த மார்க்ஸின் குடும்பம் வறுமையில் உழன்றது. பணக்கார குடும்பத்திலிருந்து வந்தும் தனது கணவரின் கொள்கைக்காக அனைத்தையும் துறந்த ஜென்னி, தாங்கள் அனுபவித்த வேதனைகளையும், தனது மகளின் மரணத்தையும் டைரியில் குறித்திருக்கிறார்

💥மார்க்ஸ் என்ற மாமனிதனுக்கு தூணாக நின்ற ஜென்னிக்கு புற்றுநோய் ஏற்பட்டது. அவருக்கு மருந்து வாங்ககூட முடியாமல் தவித்தார் உலகம் உய்வு பெற வேண்டும் என்று கனவு கண்ட மார்க்ஸ். ஜென்னியையும் மரணம் கொண்டு போக நிலைகுலைந்து போன மார்க்ஸ் இரண்டே ஆண்டுகளில் 1883-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் நாள் தனது 64-ஆவது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

💥உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, தங்க இடமின்றி வாழ நேர்ந்த போதும் ‘சமதர்மகொள்கை’ என்ற தன் இலக்கிலிருந்து மாறவே இல்லை மார்க்ஸ் என்ற அந்த மாமனிதன். அவருக்கு வானம் வசப்பட்ட அளவிற்கு வாழ்க்கை வசப்படவில்லைதான். ஆனால் இன்றைய உலகில் ஒரு தொழிலாளியின் நலன் காக்கப்படும் ஒவ்வொரு கணமும் மார்க்ஸுக்குதான் நன்றி சொல்கிறது வரலாறு. மார்க்ஸின் வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடம் இதுதான்.துன்பமும், துயரமும் போட்டிப் போட்டுக்கொண்டு நம்மை தாக்கினாலும், நாம் வகுத்துக் கொண்ட இலக்கை நோக்கி நம் பயணம் விடாமுயற்சியுடன் தொய்வின்றி தொடர வேண்டும். அவ்வாறு தொடர்ந்தால் ஒருவேளை வாழ்க்கை வசப்படாவிட்டாலும், நிச்சயம் நாம் விரும்பும் வானம் வசப்படும்.

கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு
கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு

கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்