
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதி வாரத்தில்
2023 கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மே மாத இறுதி வாரத்தில் வெளியிடுவதற்கு பரீட்சை திணைக்களம் எதிர்பார்க்கிறது.
இம்மாதத்துக்குள் முடிவுகளை வெளியிட முடியும் என பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற 2023 கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 346,976 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
அவர்களில் 281,445 பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 65,531 தனியார் விண்ணப்பதாரர்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
