
மட்டக்களப்பில் கதிரவெளி தொடக்கம் வாகரை வரையில் மாபெரும் பேரணி
மட்டக்களப்பு கதிரவெளி பிரதேசத்தில் இல்மனைட் தொழிற்சாலை முன்னெடுப்புக்களை தடுத்தல் மற்றும் வாகரைப் பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெறும் நில, வள அபகரிப்பை, சூறையாடலை தடுத்தல் தொனிப்பொருளில் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கதிரவெளி தொடக்கம் வாகரை வரையில் காலை 10.30 மணியளவில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
கோறளைப்பற்று வடக்கு ( வாகரை) முற்போக்குத் தமிழர் கழக நில வள மீட்பு பாசறையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த பேரணியில் பொதுமக்கள் கலந்து நடைபவணியாக சென்றிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
