
மின்சார கட்டண குறைப்பு?
நடப்பு மே மாதத்திற்குள்ளாக மின்சாரக் கட்டணம் மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 4 ஆம் திகதி வீட்டுப் பாவனைக்கான மின்சாரக் கட்டணம் 21.9 வீதத்தினால் குறைக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக 30 அலகுகளுக்குக் கீழ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 33 வீத கட்டண குறைப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இம்மாத நடுப்பகுதியில் மின்சாரக் கட்டணம் மீண்டும் கணிசமான அளவில் குறைக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
