பசியின் கொடூரம் : மண், இலைகளை உண்ணும் மக்கள்

சூடானில் உள்நாட்டு போர் காரணமாக விவசாய நடவடிக்கைகள் இடம்பெறாத காரணத்தால் மக்கள் பசியின் கொடுமை தாங்க முடியாது மண், இலை, குழைகளை சாப்பிடும் அவலநிலைக்கு சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவப்படைக்கும் இடையே உள்நாட்டு போர் வெடித்து தற்போது வரை குறையவில்லை.

இதேவேளை சூடானில் தற்போது 49 மில்லியன் மக்கள் வசித்து வருகின்ற நிலையில்18 மில்லியன் மக்கள் உணவு தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் உள்நாட்டு போரில் காயமடைந்த 160 க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் 60 க்கும் மேற்பட்ட ஊழியர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

சூடானில் ஏற்பட்ட போரால் விவசாய பயிர்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டதனால் மக்கள் உணவைத் தேடி வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இவ்வாறு மக்கள் இடம் பெயர்வால் அங்கு மலேரியா மற்றும் பிற நோய்கள் பரவுவதாக தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் சூடானுக்கு வரும் சர்வதேச உதவிகள் பட்டினியால் வாடும் பகுதிகளில் உள்ள மக்களை சென்றடைவதை இராணுவம் தடுத்து வருகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்