ப்ளூடூத் ஸ்பீக்கருக்குள் ஐஸ் கொண்டு சென்றவர் கைது

ப்ளூடூத் ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டார் .

மட்டக்குளி பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவரிடமிருந்து 50 இலட்சம் ரூபா பெறுமதியான 500 கிராம் ஐஸ் போதைப்பொருள் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை கைது செய்யப்பட்ட நபர் துபாயில் மறைந்து வாழும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரின் நெருங்கிய உறவினர் என விசாரணையில் தெரியவந்துள்ளது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்